எலும்புகளை வலுப்படுத்துகிறது வைட்டமின் சி சத்து நிறைந்த பிளம்ஸ் பழம்

பிளம்ஸ் பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. இது உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது.

பொதுவாக பல வகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துகள் கொண்டதாக இருக்கின்றன. ஒரு சில பழங்கள் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, நோய் நொடிகளை நீக்குகின்றன.

பிளம்ஸ் பழம் அப்படிப்பட்ட பழ வகைகளுள் ஒன்று. இதில் மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ போன்ற சத்துகளை உள்ளடக்கியது. இந்த பழம் சிறுநீரகம், இதயம், கண்பார்வை, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு தீர்வாக திகழ்கின்றது.

அந்தவகையில் இந்த அற்புத பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். பிளம்ஸ் பழங்களில் வைட்டமின் சி சாது நிறைந்திருக்கிறது இது உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது, இதில் இருக்கும் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

பிளம்ஸ் இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறந்த செயலாற்றுகிறது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.