புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்காக சிலிக்கான் நாக்கர்ஸ்

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும்.

கோவா, வதோரா போன்ற பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். குரோஷா, நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது. நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால் உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது.

உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ் அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது. ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம்.

அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.