உடல்நலனில் அக்கறை செலுத்துவது முக்கியமான ஒன்று

சென்னை: இன்றைய இயந்திர வாழ்வில் அனைவரும் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்திக் கொள்வதென்பது இயலாத ஒன்றாகி விட்டது.

பெரும்பாலான மக்கள் உணவு முறை மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றியமைத்துக் கொண்டு இயங்குகின்றனர். இதில் அதிக நபர்கள் உட்காரந்து வேலை பார்ப்பதால் குறிப்பாக கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுள் பலருக்கு உடல் பருமன் சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

அதிகபட்ச குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்களின் அதிக நேரத்தை செல்போனிலேயே செலவழிக்கின்றனர். இதனால் சிறுவயதிலேயே குழந்தைகள் அதிகமாக செல்போன் பார்ப்பதால் கண்கள் மற்றும் மூளை சார்ந்த பிரச்சினை ஏற்படுகிறது.

கண்களுக்கு ஓய்வில்லாமல் இருப்பதாலும், தூங்கும் நேரம் குறைந்திருப்பதாலும் மன அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் நிலை உண்டாகிறது. அதுமட்டுமில்லாமல் அதிக கோபம், மூளை செல்கள் பாதிப்பு ஏற்படும்.

முதலில் தினமும் உடலுக்குத் தேவையான அளவு நீரை அருந்த வேண்டும். இவை உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கண் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளின் அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லும். சரியான அளவு ஆக்ஸிஜன் இருந்தாலே உடலை சுறுசுறுப்புடன் இயங்க உதவும்.

காலை எழுந்ததும் அனைவரின் மனமும், மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வதால் அதிகாலையே தூய ஆக்ஸிஜன் கிடைக்கும்.

துளசி இலையில் ஆக்ஸிஜன் செறிவு அதிகமாக இருப்பதால் தினமும் அதிகாலை துளசி இலை உண்பதாலும் அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைக்கும்.