கருப்பு உலர் திராட்சையில் அடங்கியுள்ள எண்ணற்ற நன்மைகள்

சென்னை: கருப்பு உலர் திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.


நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஓன்று சத்தான உணவு பொருட்கள் தான். தினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல்நல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த கருப்பு உலர் திராட்சையில் அதிகம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி பொட்டாசியம், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் இரவில் 6 கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு எண்ணற்ற பலன்களை கொடுக்கிறது. இந்த கருப்பு உலர் திராட்சையில் வைட்டமின் B மற்றும் வைட்டமின் C அதிகம் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கருப்பு உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி இது தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது. இந்த கருப்பு உலர் திராட்சைகளை ஊறவைத்து சாப்பிடுவதால் இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் இரத்தம் சுரக்க பயன்படுகிறது.


அதுமட்டுமில்லாமல் இது இரத்ததை சுத்தப்படுத்துகிறது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இந்த கருப்பு திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் நல்ல பலன் அளிக்கிறது.

இதில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கருப்பு உலர் திராட்சையில் பாஸ்பரஸ் மற்றும் போரான் கால்சியம் போன்ற கனிமச்சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்த கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் கை மற்றும் கால் வலி போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.