நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க... பெண்களுக்கான எளிய டிப்ஸ்!

அழகான தோற்றம் குறித்த ஆர்வம் பெண்களிடம் அதிகமாக உள்ளது. நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி இவற்றை கடைபிடித்தால் போதும். ஒரு மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை எடை குறைப்பதே உடலுக்கு ஆரோக்கியமானது.

கொஞ்சம் நாட்களிலேயே அதிகமாக எடையைக் குறைக்க ஆசைப்பட்டால், அது விபரீதத்தையே கொண்டுவந்து சேர்க்கும். இயற்கையாக உடல் எடையைக் குறைக்க அதிக நாட்கள் தேவைப்படும்.

எந்த ஒரு மருந்தாலும் ஆரோக்கியமான முறையில் குறைக்க உடல் எடையை முடியாது. போதிய உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் தான் ஒருவரது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கும்.

சைக்கிளிங், ஷட்டில், வாக்கிங், யோகா, என ஏதாவது ஒன்றை, விருப்பத்தின் அடிப்படையில் செய்து கொள்ளலாம். தரையில் செய்யக்கூடிய ஃப்ளோர் எக்ஸர்சைஸ்களாகத் தேர்ந்தெடுத்து வீட்டில் செய்யலாம்

தினமும் ஜிம்முக்கு சென்று உடல் எடை குறைந்து அழகான உடல் வாகை பெறலாம் என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள். இதனால் ஆரம்பத்தில் உடல் எடை குறைவது போன்றுதான் தோன்றும், போகப்போக முன்பு இருந்ததை விட எடை அதிகரிக்கும். முன்பைவிட சுறுசுறுப்பு குறைந்து, சாதாரண வேலையைக்கூட செய்யமுடியாத நிலையும் ஏற்படக்கூடும்.