மெலிந்த உடல்வாகு வேண்டுமா? அப்போ ஐந்து, ஆறு முறை உணவை பிரித்து சாப்பிடுங்கள்

புதுடில்லி: மெலிந்த உடல்வாகுவை பெற விரும்புபவர்கள் தினமும் ஐந்து, ஆறு முறை உணவை பிரித்து கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 20 கோடி பேர் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் தூங்கின்றனர். நிறைய பேர் உணவு கிடைத்தும் சாப்பிட விரும்பாமல் பசியுடன் தூங்க செல்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதுதான் அதற்கு காரணமாக இருக்கிறது.

மாதத்தில் பல நாட்கள் பசியுடன் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மெலிந்த உடல்வாகுவை பெற விரும்புபவர்கள் தினமும் ஐந்து, ஆறு முறை உணவை பிரித்து கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். அப்படி சம இடைவெளியில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.

இரவு உணவை தவிர்த்தால் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும். அவ்வாறு செய்வதன் மூலம் ஓரிரு கிலோ உடல் எடையை குறைக்க நேரிடலாம்.