உடல் எடையை குறைக்கணுமா... இதோ உங்களுக்கான எளிய பானம்

சென்னை: உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. உங்கள் எடையை விரைவில் குறைக்க எளிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தினசரி உடற்பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் கலவையானது ஒரு நபரை ஆரோக்கியமாக மாற்றும் மற்றும் ஆரோக்கியமான வழியில் எடையைக் குறைக்க உதவும். தேவையற்ற தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் அற்புதமான ஹோம்மேட் மற்றும் ஆர்கானிக் ரெசிபி உள்ளது.

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டு உடல் எடையைக் குறைக்கும் பயணத்தைத் தொடங்கத் திட்டமிடுபவர்கள் இந்த பானத்தை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். செய்ய எளிதானது மற்றும் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். எப்படி செய்யலாம்?

தேவையான பொருட்கள்

ஒரு தேக்கரண்டி சப்ஜா விதை (துளசி விதை)- சப்ஜா விதை மற்றும் சியா விதை இரண்டும் வெவ்வேறானது. பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். எனவே அவை இரண்டிற்கும் இடையான வேறுபாட்டை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்
இரண்டு தேக்கரண்டி தேன்
எலுமிச்சை சாறு சிறிதளவு
ஒரு சில எலுமிச்சை துண்டுகள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு சூடானதும், சப்ஜா விதைகள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை அரை மணி நேரம் ஊற விடவும். ஊற வைத்தவுடன், எலுமிச்சை துண்டுகளை சேர்த்து அருந்தலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.