சிறுநீரக கல்லை தடுக்க என்ன செய்யணும்... தெரிந்து கொள்வோம் வாங்க!!!

சென்னை: சிறுநீரக கல்லை தடுக்க என்ன செய்வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் உள்ளன.

உணவு செரிமானம் ஆன பின்னர் இவை சிறுநீரில் வெளியேறிவிடும், சில நேரங்களில் ரத்தத்தில் இவைகளின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும்.

இவை ஒன்று திரண்டு சிறுநீர்ப் பாதையில் கற்களை உருவாக்குகின்றன. எனவே சிறுநீரக கல் கரைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். முதலில், சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனடியாக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். அதிலும், குறிப்பாக புடலங்காய் சுரைக்காய் பரங்கி வாழைத்தண்டு வெள்ளரிக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு குடித்து வர சிறுநீர் கல் பிரச்னை தீரும். வாரம் ஒருமுறை பார்லி வேக வைத்த நீர் குடித்து வர சிறுநீரக கல் பிரச்னையே வராது. வெயில் காலத்தில் இளநீர், மோர் போன்றவற்றை போதுமான அளவு குடித்து வரலாம்.

அகத்தி கீரையுடன், சீரகம், உப்பு சேர்த்து சமைத்து சாப்பிட நல்ல பலன் தரும். முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து, 30 கிராம் அளவிற்கு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னை தீரும். சிறுநீரகங்கள் பலப்பட புதினா கீரை அருமையான மருந்து. தினமும் உணவில் புதினா கீரை சேர்த்து வருது நல்ல பலன் அளிக்கும்.