குளிர்காலம் வந்துக் கொண்டே இருக்கிறது: குழந்தைகளின் உணவில் கவனம் வேண்டும்

சென்னை: குளிர் ஒருபக்கம் வாட்டி எடுத்தாலும், மறுபக்கம் ஏராளமான நோய்த்தொற்றும் வந்து, நம்மை போட்டு பாடாய் படுத்திவிடும். பெரியவர்களாக இருந்தால் கூட சமாளித்துவிடலாம்.

ஆனால், இந்த நோய்த்தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரும் சவாலான விஷயம். அதுவும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எந்த காலநிலையாக இருந்தாலும் மிகவும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிவிடுவார்கள்.

எனவே, எந்த காலமாக இருந்தாலும் சரி குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களை எந்த நோயும் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். அந்தவகையில், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.

வெல்லம்: வெல்லம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி, இந்த குளிர்காலத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த உணவாக இருக்கிறது. எனவே, தினமும் சிறிதளவு வெல்லத்தை சேர்த்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்கள். அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு வெல்லத்தை கலந்து காலை நேரத்திலும் கொடுக்கலாம்.

இது உங்க குழந்தையின் உடலை சூடாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளும். பெரியவர்களும் இதை முயற்சிக்கலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் அல்சர் விரைவில் குணமாகிறது.