இரத்தக்கசிவை எளிய முறையில் தடுக்கும் வின்டர் மெலான்!

குளிர்காலத்தில் வளரும் சில வகையான காய்கறிகளில் குளிர்கால முலாம்பழம் ஒன்றாக உள்ளது. இது குளிர்காலத்தில் வளர்வதால் இங்கு இதனை வின்டர் மெலான் என்று அழைக்கின்றனர். இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வின்டர் மெலானில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு, மற்றும் பல வைட்டமின்கள் வளமாக நிறைந்துள்ளது.

வின்டர் மெலானில் அதிக அளவில் நீர்சத்து உள்ளது. உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வின்டர் மெலான் ஜூஸைக் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

வின்டர் மெலானில் மிக குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. ஆகவே தினமும் காலை நேரத்தில் இதன் ஜூஸைக் குடித்து வந்தால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

உடலின் உட்பகுதியில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அதனால் சிலருக்கு இரத்தம் வரும். இப்படி வரக்கூடிய இரத்தக்கசிவை எளிய முறையில் தடுக்க வின்டர் மெலான் ஜூஸ் உதவுகிறது. அதுமட்டு மல்லாமல் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வருதல், பைல்ஸ் நோயினால் ஏற்படும் இரத்தக்கசிவு, அல்சரினால் உடலினுள் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவற்றை தடுக்க வின்டர் மெலான் உதவுகிறது.