சென்னையில் கொரோனாவுக்கு 10,012 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,57,614 ஆக உள்ளது. ஆனால் தற்போது மருத்துவமனையில் 10,012 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,170
அண்ணா நகர் - 1,115
தேனாம்பேட்டை - 869
தண்டையார்பேட்டை - 666
ராயபுரம் - 827
அடையாறு - 850
திரு.வி.க. நகர் - 860
வளசரவாக்கம் - 744
அம்பத்தூர் - 735
திருவொற்றியூர் - 229
மாதவரம் - 374
ஆலந்தூர் - 678
பெருங்குடி - 448
சோழிங்கநல்லூர் - 287
மணலி - 134