குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் குளிக்க தடை

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு - தென் கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

இதனை அடுத்து நாளை புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் காலை தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழக - புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.

மேலும் வருகிற டிச.5ல் நெல்லூருக்கும் மசிலிப்பட்டணத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும்.


இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.