சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 11,107 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,93,299 ஆக உள்ளது. 11,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,78,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 92% ஆக உள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,569 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் உயிரிழந்தோர் விகிதம் 1.85% ஆக உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 918
அண்ணா நகர் - 972
தேனாம்பேட்டை - 728
தண்டையார்பேட்டை - 497
ராயபுரம் - 575
அடையாறு- 735
திரு.வி.க. நகர்- 768
வளசரவாக்கம்- 607
அம்பத்தூர்- 686
திருவொற்றியூர்- 247
மாதவரம்- 369
ஆலந்தூர்- 562
பெருங்குடி- 394
சோழிங்கநல்லூர்- 209
மணலி - 119