சென்னையில் கொரோனாவுக்கு 11,320 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,67,376 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 11,320 பேர் உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,263
அண்ணா நகர் - 1,206
தேனாம்பேட்டை - 1,103
தண்டையார்பேட்டை - 784
ராயபுரம் - 860
அடையாறு - 991
திரு.வி.க. நகர் - 886
வளசரவாக்கம் - 848
அம்பத்தூர் - 762
திருவொற்றியூர் - 281
மாதவரம் - 454
ஆலந்தூர் - 595
பெருங்குடி - 506
சோழிங்கநல்லூர் - 339
மணலி - 237