புது ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தம் ..உணவு வழங்கல் துறை விளக்கம்


சத்தீஸ்கர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 7 & 17ஆம் தேதி 2 கட்டங்களாக நடந்தது. இத்தேர்தலில் சுமார் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உ ள்ளது.

அடுத்த கட்டமாக வாக்கு எண்ணிக்கை விரைவில் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில் ரேஷன் கார்டு விநியோகம் தொடர்பாக மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து பேசிய பேசிய உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டுகளில் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதனை விநியோகிக்க முடியாது. அனைத்து பணிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.