மதுரையில் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 376 பேர் டிஸ்சார்ஜ்

மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

மதுரையில் நேற்று புதிதாக 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 60 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 64 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 45 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 800 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.