இந்த தேதி வரையிலும் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம்

சென்னை : ஆதாரை புதுப்பிக்க டிச.14 வரை இலவசம் ... இந்திய குடிமகனின் தனித்துவ அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி கொண்டு வருகிறது. அவ்வப்போது ஆதார் கார்டில் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

அதே போன்று மொபைல் எண்ணை மாற்றம் செய்தாலோ அல்லது வேலை நிமித்தம் காரணமாக வெளியூர் சென்றாலோ அந்த முகவரியை கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும். அந்த வகையில், வருகிற டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என UIDAI ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


இதையடுத்து இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கவில்லையெனில் அதற்கான கட்டணத்தை செலுத்தி புதுப்பிக்க வேண்டும். மேலும், UIDAI ன் இணையதள பக்கமான myaadhaar.uidai.gov.in என்கிற பக்கத்தின் மூலமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். முதலில், ஆதார் புதுப்பிப்பு விருப்பத்தை கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.

அதன் பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவு செய்து ஆவண புதுப்பிப்பு விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர், அடையாள அட்டை, முகவரி சான்று ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். எனவே இதனை சமர்பித்ததும் உங்களுக்கு கோரிக்கை எண் வழங்கப்படும். இதன் மூலமாக ஆதார் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக்கொள்ளலாம்.