பராமரிப்பு பணி .. இன்று 173 ரயில்கள் ரத்து

இந்தியா: இந்தியாவில் பல கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதன் காரணமாக ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது பாதியளவு ரயில் சேவைகளை மின் ரயில் சேவையாக மாற்றி கொண்டு வருகிறது.

இதை அடுத்து இதன் காரணமாக அனைத்து பயணிகள் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ரயில் தடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் விதமாக பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று 173 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் 37 ரயில்களின் தொடக்க ஸ்டேசன்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றும் 41 ரயில்கள் கடைசி ஸ்டேன்களின் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.