டென்னசி ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 18 ஆயிரம் லிட்டர் டீசல் வீணானது

அமெரிக்கா: அமெரிக்காவின் டென்னசி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 ஆயிரம் லிட்டர் டீசல் ஆற்றில் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், எரிபொருள் கொண்டு செல்லப்பட்ட இழுவை படகு கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லிட்டர் டீசல் ஆற்றில் கொட்டியது.

இதனால், மெக்ஃபார்லேண்ட் பூங்காவைச் சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் டீசல் மிதக்கும் நிலையில், பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, ஆற்றில் கசிந்த டீசலை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, படகு மூழ்கியதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.