ஹரியானா பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் .. முதல்வர் தெரிவிப்பு

ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தக்கில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஹரியானா பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த 18,000 ஆசிரியர்களில் 11,000 பேர் நிரந்தர ஆசிரியர்களாகவும், 7,000 பேர் ஹரியானா திறன் வேலைவாய்ப்பு கழகம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கல்வியை அளிக்கும் வகையில் அரசு பணியாற்றி வருவதாகவும், இதுவரை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 லட்சம் டேப்லெட் (tablet) வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அத்துடன் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், இரட்டை மேசைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.