அலாஸ்கா மாகாணத்தில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்து

அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆன்கரேஜ் பகுதியிலுள்ள சோல்டாட்னா விமான நிலையம் அருகே 2 விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் ஒரு விமானத்தில் இருந்த அலாஸ்கா மாகாண சட்டப்பேரவை கீழவை உறுப்பினரான குடியரசு கட்சியை சேர்ந்த கேரி க்னோப் (Gary Knopp) பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு விமானத்தில் பயணித்த தெற்கு கரோலினாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு (National Transportation Safety Board) அமைப்பு, அமெரிக்க பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.