பாகிஸ்தானில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 2,752 பேர் பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.46 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,46,351 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து 12-வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.