இந்தியாவில் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி உற்பத்தி

300 மில்லியன் டோஸ் உற்பத்தி... ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் சுமார் 300 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷ்யா வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறியதாவது:

இந்தியாவில், நான்கு பெரிய உற்பத்தி நிறுவனங்களுடன் எங்களுக்கு ஒப்பந்தங்கள் உள்ளன.2021 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் சுமார் 300 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யலாம்.தடுப்பூசி உற்பத்தி 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.