இன்று வங்கதேசத்தில் நிலநடுக்கம்


இந்தியா :நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவு ...வங்கதேசத்தில் இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரிக்டர் அளவுகோளில் இது 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கதேசத்தில் நிலநடுக்கமும், இந்தியாவில் நில அதிர்வும் ஏற்பட்டு உள்ளது. வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் அதேநேரத்தில், இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கொல்கத்தா காவல்துறை, மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் வெளியிட்டு உள்ள தகவலில், நில அதிர்வால் சேதம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து உள்ளனர்.