7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம்; கல்வித்துறை அமைச்சர் தகவல்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 303 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான இடங்கள் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் நிரப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பது இயலாத காரியமாகிவிட்டது.

ஒன்றிரண்டு சதவீதம் மாணவர்கள் கூட சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கொண்டு வந்தது. இதற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் திருச்சியில் பேட்டியளித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படித்த 303 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த இடங்கள் உள்ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் என்றார்.