தமிழகத்தில் நேற்று புதிதாக 470 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. திலும் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 470 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 470 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 242 ஆண்கள் மற்றும் 227 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 94 பேருக்கும்,கோவையில் 55 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஒருவர் உள்பட மொத்தம் 35 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும்

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 525 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 585 ஆக உள்ளது. நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை என அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.