உச்சநீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் இன்று (பிப். 6) பதவி ஏற்பு

புதுடெல்லி : உச்சநீதிமன்ற கெலீஜியம் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி 5 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரை செய்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த நிலையில் இன்று (பிப்.6) புதிய நீதிபதிகள் பதவி ஏற்க இருக்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்துவைக்க இருக்கிறார்.

மேலும் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க இருக்கும் நிலையால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கும் . பொதுவாக உச்சநீதிமன்றத்தில் இருக்கும் 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 27 நீதிபதிகள் பணியாற்றி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (பிப். 6) புதிய நீதிபதிகளாக பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பதவி ஏற்கின்றனர்.