திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 15,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 15,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,439 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக ஆவடியில் 99 பேரும், திருவள்ளூரில் 80 பேரும், சோழவரத்தில் 67 பேரும், பூந்தமல்லியில் 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.