தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,01,195 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 6,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,91,104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,669 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 474 அண்ணா நகர் - 489 தேனாம்பேட்டை - 405 தண்டையார்பேட்டை - 232 ராயபுரம் - 310 அடையாறு - 354 திரு.வி.க. நகர் - 445 வளசரவாக்கம் - 240 அம்பத்தூர் - 326 திருவொற்றியூர் - 125 மாதவரம் - 147 ஆலந்தூர் - 168 பெருங்குடி - 188 சோழிங்கநல்லூர் - 89 மணலி - 108