கடும் பனிப்பொழிவு ... 78 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் 78 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவப் படைகள் வாபஸ் பெற்றதால் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து கொண்டு வருகிறது.ஆப்பாகிஸ்தானில் தாலிபன் ஆட்சியால் மக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து பெண்களும் கல்விக் கற்கவும், பொதுவெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள மக்கள் 2 கோடிக்கும் அதிகமானோர் உணவு கிடைக்காமலும்,

வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனைத்தொடர்ந்து வெப்ப நாடான ஆப்கனில் தற்போது மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்த உறைபனியால் கடந்த 9 நாட்களில் சுமார் 78 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகிறது.