நடப்பு ஆண்டில் இதுவரையில் ரூ.9.57 லட்சம் கோடி நேரடி வரி வசூல் .. மத்திய நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ரூ.9.57 லட்சம் கோடி நேரடி வரி வசூல் ... நடப்பு நிதி ஆண்டில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி வரையில் ரூ.9.57 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனை அடுத்து இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும். 2022-23 நிதி ஆண்டில் ரூ.16.61 லட்சம் கோடி நேரடி வரி வசூலானது.

இந்த நிலையில், 2023-24 நிதி ஆண்டில் நேரடி வசூல் ரூ.18.23 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுவரையில் 53 சதவீதம் வசூலாகியுள்ளது.

சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வரி வசூல் 7.30 சதவீதமும் தனிநபர் வருமான வரி வசூல் 30 சதவீதமும் அதிகரித்து உள்ளது.