தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,56,625 ஆக உள்ளது. 9,871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-