சக மாணவர்களை விட்டு மற்றொரு மாணவனை அடிக்க செய்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு... உத்தரப்பிரதேசத்தில் சக மாணவர்களை வைத்து 2ஆம் வகுப்பு மாணவனை அடிக்கச் செய்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில் நடந்த இந்த நிகழ்வையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள், குழந்தைகள் உரிமை அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும் ராகுல்காந்தி எம்.பியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆளும் பாஜக அரசு பிரிவினைவாத அரசியலை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மாநில கல்வித்துறையும், குறிப்பிட்ட ஆசிரியை பயிற்றுவிக்கும் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவன் அடிக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ள ஆசிரியை த்ரப்தி தியாகி மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.