ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்த நட்சத்திர மண்டலம்

நியூயார்க்: ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்தது... நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஜெல்லிமீன் வடிவிலான நட்சத்திர மண்டலத்தின் அமைதியான காட்சியை படம்பிடித்துள்ளது.

கோமா பெரனிசஸ் விண்மீன் தொகுப்பில் 900 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த JW38 ஜெல்லிமீன் நட்சத்திர கூட்டத்தின் ஒளிரும் மையம், ஒளி மற்றும் இருண்ட பொருளின் செறிவான வளையங்களால் சூழப்பட்டுள்ளது.

விண்மீன் மண்டலத்தின் சுழல் கட்டமைப்புகள் அடர்த்தியான சாம்பல் நிற தூசிகளால் சூழப்பட்டுள்ளதாகவும், ஒளிரும் நீல நிற புள்ளிகள், நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளைக் குறிப்பதாகவும் நாசா விளக்கம் அளித்துள்ளது.

பார்ப்பதற்கு அமைதியாக காட்சியளிக்கும் ஜெல்லிமீன் நட்சத்திர மண்டலம், சூடான பிளாஸ்மாவுடன் வெடிக்ககூடிய ஒரு விண்மீன் கொத்துக்குள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.