வாட்ஸ் அப்பின் புதிய அம்சம்

இந்தியா:புதிய அம்சம் ... ஒரு சில நாடுகளில் மக்களுக்கு இடையிலான தகவல் தொடர்புகளை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட செயலிகளின் இயக்கத்தை அந்த நாட்டில் தடை செய்திருப்பார்கள். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்ட செயலிகளை பயன்படுத்த வெளியில் இருந்து புதிதாக VPN செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் சமீபத்தில் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் சில செய்திகள் அதிக அளவில் பரவியதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டது. எனவே இதை தவிர்ப்பதற்காக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை ஈரான் அரசு தடை செய்தது.

இதனையடுத்து இந்த நிலையில், வாட்ஸ் அப் செயலி Proxy சர்வர்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் 3- ம் நிலை செயலிகளை தனியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

எனவே தடை செய்யப்பட்ட நாடுகளில் புதிய வெர்சன் வாட்ஸ் அப் செயலிகளை பயன்படுத்தி, இந்த அம்சத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.