ராணி எலிசபெத் புதிய உருவப்படம் வெளியிடப்பட்டது

பிரிட்டன்: புதிய உருவப்படம் வெளியிடப்பட்டது... ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்பு, இதுவரை யாரும் காணாத அவரது புதிய உருவப்படம் வெளியிடப்பட்டது

மூன்று மாதங்களுக்கு முன்பு வின்ட்சர் கோட்டையில் புகைப்படக் கலைஞர் ரனால்ட் மெக்கெக்னி இந்த படத்தை எடுத்துள்ளார். மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் புதிய உருவப்படத்தை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மே மாதம் எடுக்கப்பட்டது. வின்ட்சர் கோட்டையில் வீட்டில் இருக்கும் போது ராணி சிரிப்புடன் பிரகாசமாக தோன்றுவதை இந்த புகைப்படம் காட்டுகிறது.

நீல (dove blue) நிற ஆடை அணிந்து, தலைமுடி நேர்த்தியாக சுருட்டப்பட்ட நிலையில், மறைந்த ராணியின் அரசு இறுதிச் சடங்கை முன்னிட்டு உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ராணி அவருக்கு பிடித்த மூன்று அடுக்கு முத்து நெக்லஸ், முத்து காதணிகள் மற்றும் அவரது அக்வாமரைன் மற்றும் வைர broochesகளுடன் அவர் படம்பிடிக்கப்பட்டுள்ளார்.