இலங்கை அதிபரான பின்னர் இந்தியா வந்த ரணிலுக்கு சிறப்பான வரவேற்பு

புதுடில்லி: இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவிற்கு முதன் முறையாக வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். அங்கு கலைக் குழுவினரும் திரண்டு ஆடல் பாடல் என ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இரு நாடுகளும் தூதரக உறவுகளை துவங்கி 75வது ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் வேளையில் இலங்கை அதிபர் ரணில் இந்தியா வந்துள்ளார்.

அவரது 2 நாள் பயணத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.