எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளி...மக்களவை ஒத்திவைப்பு

இந்தியா: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன. பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறையினர் தற்காலிகமாக சீல் வைத்தனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் இதனை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்

இதனை அடுத்து அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது. பின் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதான் காரணமாக 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள். விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.