எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு நாங்கள் காரணம் இல்லை

புதுடில்லி: எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தமிழக அரசு தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதுகுறித்து லோக்சபாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தமிழகம் குறித்து பேச நிறைய உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு தமிழக அரசே காரணம். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டாம். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால், தமிழக அரசுக்கு சுமை ஏற்படாது. மற்ற மாநிலங்களை விட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் கல்லூரியில் அதிக படுக்கை வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடனுதவியுடன் கண்டிப்பாக கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிர்மலா சீதாராமன் பேசும்போது, அவரது பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தன. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.