இன்று முதல் விமான டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு


சென்னை:இன்று முதல் விமான டிக்கெட் கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை உயர்வு ... தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணம் செய்ய மக்கள் விமான பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.

பொதுவாகவே விமான நிறுவனங்கள் தங்களது 45% வருமானத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்கிறது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக உள்நாட்டில் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டு உ ள்ள நிலையில் விமான நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.


எனவே எரிபொருள் விலை உயர்வின் காரணத்தினால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதாவது, கிலோ மீட்டரை பொறுத்து ரூ.300 முதல் ரூ.1000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.300 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும், 501 முதல் 1000 கிலோமீட்டர் வரை ரூ.400ம், 1001 முதல் 1500 வரை ரூ.550ம், 1501 முதல் 2500 வரை ரூ.650ம், 2501 முதல் 3500 வரை ரூ.800ம், 3501கிலோமீட்டருக்கு மேலே பயணம் செய்பவர்களுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.