அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - ஐகோர்ட்டு பதிவுத்துறை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பின்னர் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னர் மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த அவசர வழக்குகளும் காணொலி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு இன்று முதல் அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றன. இதற்காக நீதிபதிகள் விசாரிக்க உள்ள வழக்குகளின் விவரங்களையும் ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.

அதேநேரம், இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே விசாரிப்பார்கள். இதுகுறித்து ஐகோர்ட்டு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை இமெயில் மூலம் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்குகள் எல்லாம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த வழக்குகளை நீதிபதிகள் தங்களது வீடுகளில் இருந்தோ, ஐகோர்ட்டில் உள்ள நீதிமன்ற அறையில் இருந்தோ காணொலி காட்சி மூலமே விசாரிப்பார்கள். ஜூன் மாதம் முழுவதும் இந்த நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.