கம்யூனிஸ்ட் மேனிபேஸ்ட்ரோ புத்தகத்துக்கு பதிலாக பகவத் கீதையை அனுப்பிய அமேசான்

பெரும்பாலான மக்கள் தற்போது ஆன்லைன் வணிக தளங்கள் மூலம் பொருட்களை ஆடர் செய்து பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது சில நேரங்களில் தவறுதலாக வேறு பொருட்களை அனுப்பிவைப்பது எப்போதாவது நடைபெறும். இந்நிலையில் தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த சுதிர்த்தா தாஸ் என்பவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கம்யூனிஸ்ட் மெனிபேஸ்ட்ரோ எனப்படும் கம்யூனிஸ் கட்சி அறிக்கை புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து இருந்தார். ஜுன் 10 ஆம் தேதி ஆர்டர் கொடுத்தவருக்கு சில தினங்களுக்குப் பின்பு புத்தகம் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை டெலிவரி செய்யப்படும் என்ற குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது.

இப்படி குறுஞ்செய்தி அனுப்பியப் பின்பு அந்த நிறுவனம் சுதிர்த்தா தாஸை தொடர்பு கொண்டு உங்கள் ஆர்டரை நாங்கள் தவறுதலாக மாற்றி அனுப்பி விட்டோம். ஒருவேளை உங்களுக்கு புத்தகம் டெலிவரி ஆனால் அதைத் திருப்பி அனுப்பி விடுங்கள் என்று தகவல் கொடுக்கப்பட்டது. சரி என்று சுதிர்த்தா தாஸ் கூறினார்.

இந்நிலையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தபோது புத்தகம் டெலிவரி ஆகி இருந்தது. அதைப்பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனப்படும் கம்யூனிஸ்ட் மேனிபேஸ்ட்ரோவுக்கு பதிலாக சுருக்கப்பட்ட வடிவத்தில் பகவத் கீதை அனுப்பப்பட்டு இருந்தது.

சுதிர்த்தா தாஸ்க்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மற்றும் இன்வாய்ஸ் எல்லா இடங்களிலும் கம்யூனிஸ் மேனிபேஸ்ட்ரோ என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் வந்திருப்பது பகவத் கீதையின் சுருக்கப்பட்ட வடிவம். தவறுதலாக வேறு எதையோ அனுப்பியிருக்கலாம். அதெப்படி எதிர்மறையான கருத்துள்ள ஒரு புத்தகத்தை அனுப்பியிருக்க முடியும் என்ற சந்தேகம் எழும்பத்தான் செய்கிறது.