வானில் பறந்த அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது

வாஷிங்டன்: கனடா நாட்டின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது.

'அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் கடந்த 4-ம் தேதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. தங்கள் நாட்டு வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியது.

இதேபோல், அமெரிக்காவின் அலாஸ்காவில் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கிடையே, கனடா நாட்டின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அமெரிக்கா, கனடா எல்லையில் உள்ள லேக் ஹுரான் பகுதியில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.