கேரளாவில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - பினராயி விஜயன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா வைரஸ் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,120 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது தொடர்கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என கேரளா இயற்கை பேரிடர்களால் அவதியடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது.