சபோரிஜியா மாகாணத்தில் தாக்குதல்... உக்ரைன் வீரர்கள் 28 பேர் பலி

ரஷ்யா: சபோரிஜியா மாகாணத்தில் தாக்குதல்... உக்ரைனின் சபோரிஜியா மாகாணத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் கொல்லப்பட்டனர் 53 பேர் காயமடைந்தனர்.

இதனை ராடா நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டன.

அதில் உக்ரைனில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்தில் ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிக் கொண்டிருந்த காட்சியும் அப்போது இஸ்கந்தர் ஏவுகணை தாக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.