ஆங்சான் சூகி கோரிக்கை: மியான்மர் நீதிமன்றம் மறுப்பு

மியான்மர்: ஆங்சான் சூகி விடுத்த கோரிக்கை ஏற்க மறுப்பு... மியான்மரில் ராணுவ அரசு சுமத்திய புகார்களை ரத்து செய்யுமாறு ஆங் சான் சூ கி விடுத்த கோரிக்கையை ஏற்க அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆங் சான் சூ கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியதாகக் கூறி ஆறு லஞ்ச ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராணுவ அரசாங்கம் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அரசியல் ரீதியாக தன்னை ஒடுக்க சுமத்தப்பட்டுள்ளதாக கூறி சூ கி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்க மியான்மர் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 78 வயதான ஆங் சான் சுகியீ, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.