கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதன் பதவிக்காலம் முடிவடைவதால், அங்கு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனா கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவல்ல. இதனால் பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பின் சட்டசபை தேர்தலை நடத்தலாம், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் பீகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியபோது, கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உத்தரவிட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு நாளுக்கு 70 ஆயிரத்தை கடந்துள்ளது.