அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜ., : முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

திருப்பூர்: அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் பா.ஜ.க. வைத்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மகளிர் இட ஒதுக்கீட்டை தேவையே இல்லாமல் மக்களவை தொகுதி மறுவரையறை கூட இணைத்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்றும் கூறியுள்ளார். மேலும் மகளிருக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை, மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு பறிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் பா.ஜ.க. வைத்திருப்பதாகவும், வெளியே சண்டை போடுவது போல் நடித்து, உள்ளே அவர்கள் நட்பாக இருப்பதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார்.