கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி

பிரித்தானியா அனுமதி... ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை தமது நாட்டில் பயன்படுத்தவதற்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

50 மில்லியன் மக்களுக்காக, பிரித்தானியாவினால் 100 மில்லியன் மருந்துகளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ஏப்ரல் மாதமளவில் கொரோனா தடுப்பு மருந்தினை தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்தன.

இந்த தடுப்பு மருந்து, பாதுப்பானதும் தரமிக்கதும் என நிபுணர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 82 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 53 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 414 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை கடந்துள்ளது.