பேருந்து கட்டணம் உயர்வு..மக்கள் அதிர்ச்சி..

இலங்கை: இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருக்கிறது.
இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் நாடே முடங்கும் சுழல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய ஆசரியர்களும், மருத்துவ ஊழியர்களும் அரசு மீதான கோபத்தை வெளிபடுத்தினார்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் 22% வரை உயரத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயரத்தபட உள்ளதாக இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.